Saturday, 20 February 2016

நானும் இனி விவசாயி......

இதோ.......

இன்று முதல் நானும் ஒரு விவசாயி.....

மண்ணை கலந்தேன்.....

மண்ணோடு கலந்தேன்....மனதால்....

விதைக்காக வெயிட்டிங் ....

ஒட்டன்சத்திரம் பரமேஸ்வரன் என்ற இளைஞர், பாரம்பரிய மரபு காய்கறிகளின் விதைகளை அரும்பாடுபட்டு தேடித்தேடி சேகரித்து....விற்பனையும் செய்து வருகிறார்...

தோட்டம் சிவா மூலம் கிடைத்த அறிமுகம் ....

அறிய வகை காய்கறிகள்...பூச்செடிகள்....மூலிகைகள் என 60 வகை விதைப் பைகள்....

தபால் செலவோடு ரூ.650....

பணம் அனுப்பி ...வரவுக்காக காத்திருக்கிறேன் ....

அதற்குள் வளர்ப்பு பைகளை இன்று தயார் செய்து விட்டேன்....

இரண்டு பங்கு தேங்காய்நார் கழிவு.....
இரண்டு பங்கு மண்புழு உரம்.....
ஒரு பங்கு செம்மண்.....

நான் வளர்க்கப்போவது, எனக்கு விளைச்சலை தரும் செடிகள் அல்ல.....

என்னோடு உறவாடி மகிழப்போகும் இன்னொரு உயிர்.....


2 comments:

  1. நண்பருக்கு வணக்கம். இந்த படங்கள் பல விசயங்களை என் மனதில் கொண்டு வருகிறது. உங்கள் ஆர்வத்திற்கும், உழைப்புக்கும் வாழ்த்துகள். வாருங்கள் ஒன்றாய் தோட்டம் அமைப்போம். ஜெயிப்போம். வாழ்த்துகள். - 'தோட்டம்' சிவா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவா.....
      எல்லாம் நீங்கள் விதைத்த ஆர்வம்தான்....
      என் மனதில் துளிர்விட துவங்கிவிட்டது. ....
      விரைவில் என் தொட்டியிலும்.....

      Delete